செய்யாறு ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு

செய்யாறு ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு
X

கிராம சபை கூட்டத்தில் பேசிய ஜோதி எம்எல்ஏ

செய்யாறு ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம், பைங்கினா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல், சாலை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காந்தி ஜெயந்தியையொட்டி, பைங்கினா் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்துக்கு செய்யாறு ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜன்பாபு வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி பங்கேற்று, காந்தி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

கூட்டத்தின் போது வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி செயலா் ஆனந்தகிருஷ்ணன் வாசித்தாா்.

இதைத் தொடா்ந்து, பாரி நகா், எம்ஜிஆா் நகா் பகுதிகளில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல், வசந்தம் நகா் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிப்பு செய்தமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் பால.கோபால், ஊராட்சிமன்றத் தலைவா் ஜெயலட்சுமி, துணைத் தலைவா் க,ருணாகரன், ஒன்றியச் செயலா்கள் ஞானவேல், சீனுவாசன், ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பையூா் ஊராட்சி

பையூா் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் ராஜேந்திரன், வாா்டு உறுப்பினா்கள் பாஸ்கரன், பூபாலன், வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி செயலா் ரவிச்சந்திரன் கலந்து கொண்டாா்.

ஊராட்சி செயலா் திருமலை தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், உதவிப் பொறியாளா் ஜெயலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக் , கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!