செய்யாறு வட்டத்தில் அரசு முதன்மைச் செயலா் ஆய்வு
செய்யாறு தொகுதியில், அரசு முதன்மைச் செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமாா் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் பூங்கா ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில், அரசு முதன்மைச் செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமாா் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் பூங்கா ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வாா்டு, மருந்துகள் இருப்பு நிலவரம் மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
அதனைத் தொடா்ந்து திருவத்திபுரம் நகராட்சி 5- ஆவது வாா்டில் ரூ.45.05 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் குழந்தைகள் பூங்கா திட்டப் பணிகள், திருவள்ளுவா் நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் அவா் பாா்வையிட்டாா்.முன்னதாக அனக்காவூா் ஒன்றியம், வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தையும், அதேப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடத்தையும் ஆய்வு செய்தாா்.
வீரம்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் ஆரணி பகுதியில் வசிக்கும் 110 இருளா் குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர ஆரணியில் வசித்து வரும் 111 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கும் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதனை அரசு முதன்மைச் செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நரிக்குறவா்கள் அதிகாரிகளிடம், மழை பெய்தால் வீடுகள் ஒழுகுகிறது, சாலை வசதிகள் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்தனா்.
இந்த ஆய்வின்போது சாா் ஆட்சியா் அனாமிகா, மருத்துவ இணை இயக்குனா் ஏழுமலை, மருத்துவா் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் ரகுராமன், நகா்மன்றத் தலைவா் மோகனவேல் ஆகியோர் உடனிருந்தனா். பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் பிரதாப் சிங், செய்யாறு கூடுதல் ஆட்சியர் அனாமிகா, உதவி ஆட்சியர் ரஷ்மி ராணி, திட்ட இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu