பட்டாசு வெடி விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு

பட்டாசு வெடி விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பட்டாசு வெடித்ததில் நான்கு வயது சிறுமி மீது தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் கிராமம் , இந்திரா நகர் பகுதி சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் அவர்களின் மகள் ரவிஷ்கா , வயது நான்கு. தீபாவளி பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் ரமேஷ் அவர்களின் அண்ணன் விக்னேஷ் வீட்டில் கொண்டாடியுள்ளனர்.

அப்போது பட்டாசு வெடித்த போது ரமேஷின் மகள் ரவிஷ்கா குறுக்கே வந்துள்ளார் . நாட்டு பட்டாசு வெடித்ததில் குழந்தையின்உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதில் அருகில் இருந்த சிறுமியின் பெரியப்பா விக்னேஷ் என்பவர் சிறுமியை காப்பாற்ற முயன்றார். மேலும் விக்னேஷின் கைவிரல் துண்டாகி காயம் ஏற்பட்டு விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த சிறுமி மற்றும் பெரியப்பா விக்னேஷ் , ஆகியோரை மீட்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அதில் பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி ரவிஷ்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபத்து குறித்து செய்யாறு வாழப்பந்தல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்யாறு அருகே தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தீக்காயம் ஏற்பட்டு சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாம்பாக்கம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த நான்கு வயது சிறுமி உயிரிழந்த நிலையில் சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண நிதியாக 3 லட்சமும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேஷ், என்பவருக்கு 1 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்