செய்யாறு பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

செய்யாறு பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
X

செய்யாறு பகுதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ஜோதி எம்.எல்.ஏ.  வழங்கினார்.

செய்யாறு பகுதியில் உள்ள 13 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் உள்ள 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் 1,384 பேருக்கு செய்யாறு ஓ.ஜோதி எம்.எல்.ஏ.இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி ராஜு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஜே. சி. கே. சீனிவாசன் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என் சங்கர் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தினகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!