செய்யாறு பகுதி ஏரி குடிமராமத்து பணிகளில் மோசடி: எம்எல்ஏ குற்றச்சாட்டு

செய்யாறு பகுதி ஏரி குடிமராமத்து பணிகளில் மோசடி: எம்எல்ஏ குற்றச்சாட்டு
X

செய்யாறு ஏரியில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ ஜோதி 

முந்தைய ஆட்சியில் செய்யாறு பகுதி ஏரி குடிமராமத்து பணிகளில் ரூபாய் 5 கோடி மோசடி நடந்துள்ளதாக செய்யாறு எம்எல்ஏ உறுப்பினர் ஜோதி குற்றச்சாட்டு

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல ஏரிகளில் முந்தைய ஆட்சியில் குடிமராமத்து பணி மேற்கொண்டதில் ரூபாய் 5 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று உள்ளதாக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி குற்றம் சாட்டினார்

செய்யாறு ஏரியில் ஆய்வு மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது, அதிமுக ஆட்சியில் வட தண்டலம் கிராமத்தில் நிலமே இல்லாத ஒருவரை போலியாக தயார் படுத்தி பதிவு செய்து பின்னர் பாசன சங்க தலைவராக நியமித்து ரூபாய் 35 லட்சத்தில் குடிமராமத்து என்ற பெயரில் அரைகுறையாக வேலை செய்து பணத்தை மோசடி செய்துள்ளனர். ஏரி கால்வாய்களும் சீரமைக்கப்பட வில்லை. கரைகளை பலப்படுத்த படவில்லை.

இதனால் வீணாக நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த தொகுதியில் செய்யாறு, பாலாறு, பெரணமல்லூர் என மூன்று பிரிவுகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பல ஏரிகளின் இங்கே ஆட்சியில் 50 சதவீத அளவு கூட பணி செய்யாமலேயே மழை நாட்களில் கணக்கு காட்டி 5 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இந்த மோசடி குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மூலமாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன் என்றார்.

Tags

Next Story