திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
X

பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய அக்ரிகிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர், ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா, ஆரணி கூட்ரோடு எம்ஜிஆர் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி மோகன் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பேனா, நோட்டு புத்தகம் மற்றும் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார், இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் ,ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அதிமுக கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி மோகன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் இனிப்புகளை வழங்கினார்..

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் அடுத்த கங்காபுரம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் அப்பகுதியில் பள்ளியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரண பொருட்கள் வழங்கியும், பெண்களுக்கு சேலைகள் வழங்கியும் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற தலைவர் பொய்யாமொழி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சசிகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் மேக்களூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னிட்டு அவரது படத்திற்கு ஒன்றிய அ. தி. மு. க துணை செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஞானசேகரன் மாலை யணிவித்து மரியாதை செலுத்தியும் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூரில் அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை சொந்த நிதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று கிழக்கு ஒன்றிய செயலாளர் பி. எல். அருணாச்சலம் முன்னிலையில் பொதுமக்களுக்கு 1500 தென்னை மரக்கன்றுகளை வழங்கினார். தில் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!