/* */

நெகிழி கழிவுப் பொருள்கள் சேமிப்பு குடோனில் தீ விபத்து

செய்யாறு அருகே பழைய இரும்பு, நெகிழி கழிவுப் பொருள்கள் சேமிப்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

நெகிழி கழிவுப் பொருள்கள் சேமிப்பு குடோனில் தீ விபத்து
X

பழைய இரும்பு, நெகிழி கழிவுப் பொருள்கள் சேமிப்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் அருகே மின்கம்பியில் லாரி உரசியதால் பழைய கழிவுபொருட்கள் சேமிப்பு குடோனில் தீப்பொறி விழுந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செல்லபெரும்புலிமேடு கிராமத்தில், செய்யாறு சிப்காட் வளாகம் அருகே பழைய இரும்பு மற்றும் நெகிழி கழிவுப் பொருள்கள் சேமிப்பு குடோன் அமைந்துள்ளது. இந்தக் குடோனில் 10 க்கும் மேற்பட்டோர் வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அழிஞ்சல் பட்டு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட செல்லபெரும்புலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் அப்பகுதியில் உள்ள சிப்காட் கம்பெனிகளில் இருந்து தேவையற்ற இரும்பு, தகரம், பிளாஸ்டிக், செம்பு, மின் ஒயர்கள், கேபிள்கள், காகித அட்டைகள் உள்ளிட்ட கழிவு பொருட்களை வாங்கி வந்து அதனை தரம் பிரித்து, சில கம்பெனிகளின் தேவைக்கேற்ப வாரந்தோறும் லோடு ஏற்றி விற்பனை செய்து வருகிறார். இதற்காக கிராமத்தின் அருகே பெரிய அளவிலான குடோன் வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த குடோன் வழியாக வந்த லாரி குடோனுக்கு செல்லும் மின் ஒயரில் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் கழிவு பொருட்கள் சேமிப்பு குடோனில் தீப்பொறி ஏற்பட்டு தீ பற்றியதாக தெரிகிறது.

அப்போது காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது. அந்த குடோனில் காகித அட்டைகள் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் கரும்புகை அதிக அளவில் வெளியேறியது.

இதனைக் கண்ட பகுதி பொதுமக்கள் உடனடியாக செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் செய்யாறு தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செய்யாறு சப்-கலெக்டர் பல்லவி வர்மா, வெம்பாக்கம் தாசில்தார்கள் துளசிராமன், பெருமாள், வருவாய் ஆய்வாளர் அருள், விஏஓ சுவாமிநாதன், செய்யாறு இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், மற்றும் தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

மேலும் வந்தவாசி. பெரணமல்லூர், காஞ்சிபுரம் , உத்திரமேரூர், திருவண்ணாமலை. ஆரணி, போளூர் ஆகிய இடங்களில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுபொருட்கள் சேதம் ஆனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, குடோனின் உரிமையாளா் சேகா் அளித்த புகாரின்பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On: 15 Jun 2024 3:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனைவி இறந்த சில நிமிடங்களில் துக்கம் தாளாமல் ஐபிஎஸ் அதிகாரி
  2. ஈரோடு
    ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி...
  3. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 420 மூட்டை பருத்தி ஏலம் மூலம்
  4. கோவை மாநகர்
    பொள்ளாச்சி தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
  5. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  6. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  7. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  8. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  9. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  10. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா