விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
X

செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் செய்யாறு, மாங்கால் கூட்ரோடு, தூசி, மாமண்டூர் உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

செய்யாறு அருகே விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்வது, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்குவது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் வாகனங்களை இயக்குவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.கிருஷ்ணன் செய்யாறு, மாங்கால் கூட்ரோடு, தூசி, மாமண்டூர் உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தகுதி சான்றிதழ், சாலை வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்தது.

மேலும் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்ற 2 ஆட்டோக்கள் மற்றும் அதிக பாரம் ஏற்றிச்சென்ற லாரி ஆகிய வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும்,அதிகபாரம் ஏற்றிச்சென்ற 2 வாகன ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரைத்தார்

Tags

Next Story
ai in future agriculture