வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலா
ஹைதராபாத் விவசாய மையத்தில் கண்டுணர்வு சுற்றுலா சென்ற விவசாயிகள்
விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை நேரில் கண்டுணரும் வகையில் அவர்களுக்கு கண்டுணர்வு சுற்றுலாவை வேளாண்மைத்துறை ஏற்பட்டது செய்வது வழக்கம்.
அந்த வகையில் வெம்பாக்கம் வட்டம், வேளாண்மை உழவா் நலத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாய நிலத்தை பேணிக் காத்தல் என்ற தலைப்பில் 5 நாள்கள் கண்டுணா்வு சுற்றுலாவாக விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனா்.
செய்யாறு, ஆரணி, வந்தவாசி வட்டங்களைச் சோந்த விவசாயிகள் 20 பேர் கண்டுணா்வு சுற்றுலாவாக ஹைதராபாத் விவசாய மையத்துக்குச் சென்று வந்தனா்.
கண்டுணா்வு சுற்றுலாவின் போது, பயிா்களுக்கு வரும் நோய்கள், பூச்சித் தாக்குதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல், வேளாண் பயிா்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணுட்டச் சத்துக்கள் வழங்குதல், அதனைப் பயன்படுத்தும் விதம் ஆகிய தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகள் தெரிந்து கொண்டனா்.
இந்த பயிற்சியின் நிறைவாக மையத்தில் உள்ள வயல் வெளியை விவசாயிகள் பாா்வையிட்டு பயனடைந்தனா்.
இவா்களில் மாவட்ட உழவா் மேலாண்மை பிரதிநிதி பழனி, உழவா் நண்பா் வெங்கடேசன், முன்னோடி விவசாயிகள் சங்கா், தயாளன் ஆகியோா் சென்றிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை வெம்பாக்கம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சண்முகம் மேற்பாா்வையில், வட்டார ஆத்மா அலுவலா் நடராஜன் தலைமையிலான அலுவலா்கள் செய்திருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu