செய்யாறு அருகே தனிமைக்கு பயந்து முதிய தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு

செய்யாறு அருகே தனிமைக்கு பயந்து முதிய தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு
X

பைல்படம்.

செய்யாறு அருகே அறுவை சிகிச்சைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட எஸ் ஐயின் பெற்றோர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெண்பாக்கம் தாலுகாவைச் சேர்ந்த வரதராஜுலு வயது 82, இவரது மனைவி தனலட்சுமி வயது 75, இந்த தம்பதிக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் மகன் வெங்கடேசன் சென்னையில் எஸ்ஐ ஆக பணிபுரிந்து வருகிறார்.

செய்யாறு அருகே ஒரு மகள் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் மற்றொரு மகள் பி.டி.ஓ அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வயதான இந்த தம்பதியினர் கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனலட்சுமி வீட்டில் தவறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர், தொடர்ந்து அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் தனலட்சுமி அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்து அறுவை சிகிச்சை செய்தால் நான் பிழைக்க மாட்டேன் என பயத்துடன் புலம்பியுள்ளார். வரதராஜுலு ஆறுதல் கூறினாலும் அவரும் அச்சத்துடனே இருந்துள்ளார். இதனால் இருவரும் மன வேதனை அடைந்துள்ளனர். மேலும் ஆபரேஷனுக்கு பிறகு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நீங்கள் எப்படி தனியாக இருப்பீர்கள் என்று கணவரிடம் தனது வேதனையை கூறி மனவேதனையில் இருந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவரை விட்டு ஒருவர் எப்படி பிரிந்து இருக்க முடியும் என்று எண்ணி தம்பதியினர் சேர்ந்தே இறந்து விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் தம்பதியினர் இருவரும் இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தனலட்சுமி மற்றும் வரதராஜுலு இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து உறவினர் ரவி கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!