/* */

சிப்காட் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வெம்பாக்கம் அருகே சிப்காட் விரிவாக்க பணிக்கு நில ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

சிப்காட் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா, பெரும்புலிமேடு கிராம விவசாயிகள் சிப்காட் திட்ட அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிப்காட் நில விரிவாக்கத்திற்கு விளை நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என பல்வேறு முறை கோரிக்கைகளை வைத்து வருகிறோம். ஆனால் செய்யாறு சிப்காட் விரிவாக்கப் பணிக்காக பெரும் புலிமேடு கிராமத்தில் பெரும் பகுதி கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ரோட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் பெரும் புலிமேடு கிராமத்தில் உள்ள நன்செய் நிலங்கள் மாமண்டூர் ஏரி பாசனத்தின்கீழ் உள்ளது. நிலத்தை கையகப்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி விவசாயிகள் பெரும்புலிமேடு சிப்காட் திட்ட அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அதிகாரிகளிடம் அளித்தனர்.

Updated On: 21 Jun 2022 7:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை