செய்யாறு அருகே கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம்

புல்லவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புல்லவாக்கம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தொடங்கி வைத்தார்.
கலைக்குழுவினர் பங்கேற்று கல்வி கற்பதன் அவசியம் குறித்தும், முகக் கவசம் அணிதல் , சமூக இடைவெளி கடைபிடித்தல் , கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவுதல் போன்ற செயல்முறைகள் செய்து காண்பித்து பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு கலை நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் , ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் , பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu