செய்யாறு உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

செய்யாற்றில் உள்ள உணவகங்களில் திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு உணவகங்களில்  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
X

செய்யாறு உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சவர்மா கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மேலும் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் , உத்தரவின் பேரில், செய்யாற்றில் உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, குளிர்சாதன பெட்டிகள் உள்ளதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

செய்யாற்றில் அசைவ ஓட்டலில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காலாவதியான இறைச்சி மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன 30 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் முருகேஷ், உத்தரவின் பேரில், செய்யாற்றில் ஆற்காடு சாலை, ஆரணி கூட்டுச் சாலை, புறவழிச் சாலை, மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் இளங்கோவன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன், சுகாதார ஆய்வாளா் மதனராசன் ஆகியோா் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.

ஆய்வின்போது, உணவக குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெட்டிய கறி, மீன்கள் மற்றும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா். கெட்டுப்போன 30 கிலோ இறைச்சி மற்றும் பரோட்டா மாவுகளை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி குப்பையில் கொட்டினா். மேலும், ஒரு உணவகத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த கோழிக் கறியை ஆய்வுக்காக சேகரித்து எடுத்துச் சென்றனா்.

இதனை தொடர்ந்து புறவழிச் சாலையில் உள்ள அசைவ உணவகத்தில். சோதனை மேற்கொண்ட போது குளிரூட்டும் பெட்டியில் காலாவதியான தரமற்ற இறைச்சி மற்றும் மசாலா பொருட்கள் வைத்திருப்பதை ஆய்வில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட நெகிழி பைகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 உணவகங்களுக்கு அபராதம் விகித்தனர்.

ஆய்வின் போது, சுகாதார மேற்பாா்வையாளா்கள் பிரதாப், குமாா், அண்ணாமலை, பாபுஜி மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Sep 2023 1:20 PM GMT

Related News