அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
சொர்ணா வாரி பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவுத்துறை மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், ஆரணி, செய்யாறு, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட 25 இடங்களில் நேற்று முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செய்யாறு பகுதியில் வெம்பாக்கம் வட்டத்தில் தூசி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் நெல் மூட்டைகள் விவரம் நெல் ரகங்கள் குறித்து கேட்டறிந்தார்.
விவசாயிகளை காத்திருக்கச் செய்யாமல் நெல் மூட்டைகளை விரைவாக எடை போட்டு அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சேமிப்பு நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கோபிநாத் செய்யாறு வருவாய் கோட்ட அலுவலர் விஜயராஜ், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu