முதல்வர் வருகையையொட்டி செய்யாறில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆய்வு

முதல்வர் வருகையையொட்டி செய்யாறில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆய்வு
X

கோப்பு படம்.

செய்யாறில் தமிழக முதல்வர் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் வருகிற 13-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு "எண்ணும் எழுத்தும்" எனும் புதிய கல்வித் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியை காண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் பள்ளியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது கோட்டாட்சியர் விஜயராஜ் , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, கோட்ட பொறியாளர் ராஜகணபதி, காவல்துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர், ஊராட்சிமன்றத் தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future