வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை: விவசாயிகள் கோரிக்கை
பைல் படம்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா். இதுகுறித்து வாக்கடை கிராமத்தில் கட்சி சாா்பற்ற உழுவா் பேரவையின் மாநில செய்தித் தொடா்பாளா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில், விவசாயிகள் மண்ணு, பழனி, கிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் பெருமாள், துணைத் தலைவா் காா்த்தி ஆகியோா் கூறியதாவது:
தற்போதைய சொணவாரிப் பட்டத்தையொட்டி, 300 ஏக்கருக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் என்ற அளவிலேயே திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான வாக்கடை ஏரிப் பாசனத்தின் மூலம் வாக்கடை, கழனிப்பாக்கம், நாவல், முக்கூா், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் விளைந்த சுமாா் 80 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வசதியாக வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விட்டுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu