மனைவி, பிள்ளைகள் கண் எதிரே ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி

மனைவி, பிள்ளைகள் கண் எதிரே ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி
X
மனைவி, பிள்ளைகள் கண் எதிரே ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளியை தேடும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம் தெருவை சேர்ந்த வீராசாமி மகன் முத்து (வயது 55). மாற்றுத்திறனாளியான இவர் பட்டு நெசவு தொழிலாளி. தொடர்மழையால் தற்போது வெம்பாக்கம் மாமண்டூர் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் தனது மனைவி, 2 மகன்கள், 2 மகள்களுடன் உபரிநீர் வெளியேறும் கலங்கல் அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அனைவரும் ஏரியில் குளிக்க விரும்பியுள்ளனர். முத்து இறங்கியபோது அவர் கால் தவறி விழுந்து விட்டார். உபரிநீர் வேகமாக வெளியேறிக்கொண்டிருந்ததால் அதில் அவர் தண்ணீரில்அடித்துச் செல்லப்பட்டார்.

தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரையில் தேடிவந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை தேடும் பணியை தொடங்குவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் தேடும் பணி நடைபெற்று வருகிறது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்