செய்யாறு , ஆரணி சாலையில் மேம்பாட்டு பணிகள் ஆய்வு
சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநர்
செய்யாறு ஆரணி சாலை 7 மீட்டர் சாலையாக இருந்து வந்தது. வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் இந்த சாலையை 10.30 மீட்டர் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2019 - 20 ஆம் ஆண்டில் ரூபாய் 1.90 கோடியில் அகலபடுத்தப்பட்ட இந்த சாலையின் தரம் குறித்து சென்னை நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் ஆய்வு செய்தார்.
கோட்டப் பொறியாளர்கள் ராஜகணபதி, இருசன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் , பொறியாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். உதவி கோட்டப் பொறியாளர்கள் சரவனராஜ், இன்ப நாதன், கபிலன் , உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu