செய்யாறில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் துணை போக்குவரத்து ஆணையர்

செய்யாறில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் துணை போக்குவரத்து ஆணையர்
X

செய்யாறில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் வட்டார போக்குவரத்து  துணை ஆணையர் ரஜினிகாந்த்.

செய்யாறில் பள்ளி வாகனங்களை துணை போக்குவரத்து ஆணையர் ரஜினிகாந்த் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட செய்யாறு, வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் தாலுகா பகுதியில் பள்ளிகள் இயக்கி வரும் வேன், பஸ் ஆகியவற்றினை ஆய்வு செய்யும் பணியினை ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் மேற்கொண்டனர்.

அப்போது பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஓட்டுனர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீ விபத்தினை தவிர்ப்பது குறித்து தீயணைப்பு துறையினர் விளக்கம் அளித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், ஆய்வாளர் கருணாநிதி வாகனங்களை ஆய்வு செய்ததில் குறைபாடுகள் உள்ள வாகனத்தை சுட்டிக்காட்டி குறைகளை சரிசெய்ய உத்தரவிட்டனர்.

ஆய்வு மேற்கொண்டிருந்த போது துணை போக்குவரத்து ஆணையர் ரஜினிகாந்த் திடீரென ஆய்வு நடக்கும் பகுதி சென்று பள்ளி வேனின் ஒன்றில் ஏறி பார்வையிட்டார். சில வாகனங்களில் பார்த்து குறைகளை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் மற்றும் ஆய்வாளர் கருணாநிதியிடம் ''தகுதியில்லாத வாகனங்களை சாலையில் ஓட அனுமதிக்காதீர்கள், முழுமையாக பார்வையிட்டு தகுதியான வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கி வாகனத்தை இயக்கிட அனுமதிக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.


Tags

Next Story
Weight Loss Tips In Tamil