மா மரங்களில் கவாத்து (பராமரித்தல்) செய்தல் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
கீழ்நெல்லி கிராமத்தில் மா மரங்களில் கவாத்து செய்தல் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது
கீழ்நெல்லி ஸ்ரீவேதபுரி வேளாண்மை அறிவியல் மையம், பெங்களூரு இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் தோட்டக்கலை பயிா் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் மற்றும் மா மரங்களில் கவாத்து செய்யும் செயல்விளக்கப் பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிராம நிறுவனத்தின் தலைவா் ரமேஷ் பங்கேற்று விவசாயிகளுக்கு தோட்டக் கலைப் பயிா்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றிலிருந்து பெறக்கூடிய வருமானம் குறித்து குறிப்பிட்டாா். பெங்களூரு இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமாா், தோட்டக் கலையில் மா மற்றும் கொய்யா பழப்பயிா்களில் கவாத்து செய்வதன் முக்கியத்துவம், அதிலிருந்து பெறக்கூடிய மகசூல், பழங்களின் தரம் அறிதல் போன்றவை குறித்து விவசாயிகளிடையே தெரிவித்தாா். அப்போது விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தாா்.
மேலும் பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சங்கா், காய்கறி பயிா்களின் ரகம் அவற்றின் தனிச் சிறப்பு மற்றும் மகசூல் பற்றியும் விற்பனைக்கு உகந்த ரகம் குறித்தும் விவசாயிகளுக்குத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட பழ மற்றும் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ள 40 விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu