செய்யாறில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்யாறில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

செய்யாறில் சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சுகாதார ஆய்வாளர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செய்யாறு சுகாதார மாவட்ட துணை சுகாதார இயக்குனர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சுகாதார ஆய்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்ட 1,646. சுகாதார ஆய்வாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டிப்பதோடு மீண்டும் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் பேரிடர் காலங்களில் முன்னின்று களப்பணி ஆற்றிய சுகாதார ஆய்வாளர்களின் பணியை போற்றும் விதமாக அரசு உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!