செய்யாற்றில் இயற்கை விவசாயத்தை காக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செய்யாற்றில் இயற்கை விவசாயத்தை காக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

 இயற்கை விவசாயத்தை காக்க வலியுறுத்தி நடைபெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டம்.

செய்யாற்றில் இயற்கை விவசாயத்தை காக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வேளாண் விரிவாக்க மையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இயற்கை விவசாயத்தை காக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய வசதியாக உயிரி உரங்களை வழங்க வேண்டும். இணை உரமான கடல்பாசி, எம்பவர் மருந்து, ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்யாறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை செய்யாறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் அதிகாரிகளிடம் வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!