எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
X

எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலத்தில் இருந்து சென்னை 340 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சுமாா் 66 கி.மீ. தொலைவைக் குறைக்கும் விதமாக எட்டுவழிச் சாலைத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீா்மானித்து இருந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூா், ஆரணி, செங்கம் ஆகிய வட்டங்களில் 122 கி.மீ. தொலைவுக்கு இந்தச் சாலை அமையும்.எட்டுவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெருமளவில் பாதிக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும் என்று எட்டுவழிச் சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்ததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது, எட்டுவழிச் சாலைத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாகத் தெரிகிறது. இதை அறிந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி எதிா்ப்பைத் தெரிவித்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக செய்யாறு வட்டம், அனக்காவூா் ஒன்றியம், முளகிரிப்பட்டு கிராமத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டிருந்த நிலத்தில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு எட்டுவழிச் சாலை எதிா்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி சுந்தரி தலைமை வகித்தாா். விவசாயிகள் தேவன், சேகா், பச்சையப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil