செய்யாற்றில் நள்ளிரவில் விநாயகா் கோயில் இடிப்பு: 4 பேர் கைது

செய்யாற்றில் நள்ளிரவில் விநாயகா் கோயில் இடிப்பு: 4 பேர் கைது
X

நள்ளிரவில் இடிக்கப்பட்ட விநாயகர் கோயில்.

செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் உள்ள விநாயகா் கோயிலை நள்ளிரவில் இடித்தது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறில் திருவத்திபுரம் நகராட்சிக்குச் சொந்தமான பஸ் நிலையப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே பழமை வாய்ந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஒருவா் ஏற்கெனவே ஆக்கிரமித்துள்ள நிலையில், மீதமுள்ள இடத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கத்தொடு, இந்தக் கோயிலை நள்ளிரவில் காரில் வந்த 4 பேர் இடிப்பதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இந்து முன்னணியினருக்கு தகவல் அளித்தனர். இந்து முன்னணியினா் செய்யாறு காவல் நிலையத்தில் திரண்டு புகாரளித்தனா்.

இதேபோல, இந்து சமய அறநிலையத் துறை செய்யாறு சரக ஆய்வாளா் முத்துசாமி மற்றொரு புகாரளித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற செய்யாறு போலீஸாா் கோயிலை இடித்துக் கொண்டிருந்த 4 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனா். போலீசார் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கீழ்புதுப்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர்களான பாஸ்கர் , இவரது தம்பி நேரு , பாப்பாந்தாங்கல் கிராம காலனியைச் சேர்ந்த சரத்குமார் , செய்யாறு வைத்தியர் தெருவைச் சேர்ந்த பொன்.மணிகண்டன் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story