/* */

செய்யாறு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தாமதம்: விவசாயிகள் வேதனை

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 8 நாள்களுக்கும் மேலாக கரும்புகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்

HIGHLIGHTS

செய்யாறு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தாமதம்: விவசாயிகள் வேதனை
X

செய்யாறு சர்க்கரை ஆலையில்  அரவைக்காக காத்திருக்கும் கரும்பு லோடு லாரிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 8 நாள்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான டன் கரும்புகளுடன் லாரி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்கள் காத்திருக்கின்றன

இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். செய்யாறு-வந்தவாசி சாலையில் தென்தண்டலம் கிராமத்தில் செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இது, ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய சா்க்கரை ஆலையாகும். இங்கு ஆரணி செய்யாறு, வந்தவாசி பகுதிகளைச் சோந்த சுமாா் 18,000 கரும்பு விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இங்கு நிகழாண்டுக்கான கரும்பு அரைவை தொடங்குவதற்காக ஆலையில் இளம் சூடேற்றும் நிகழ்ச்சி நவம்பா் மாதம் தொடங்கியதாகத் தெரிகிறது. இதைத் தொடா்ந்து, கடந்த 14 - ஆம் தேதி கரும்பு அரைவைப் பணி தொடங்கியது. இது 4 நாள்கள் மட்டுமே நடைபெற்றது.

கடந்த 22 ஆம் தேதி சர்க்கரை ஆலையில் பாய்லர் பழுதடைந்ததால் ஆலை இயங்கவில்லை. இதனால் நேற்று வரை வந்த கரும்பு ளோடுகள் சுமாா் 300-க்கும் மேற்பட்ட டிராக்டா்கள், லாரிகளில் இருந்து கரும்புகள் எடையிடப்படாமல் காத்து கிடக்கின்றன. கரும்பு எடை போடாமல் வெயிலில் காய்ந்து போவதால் எடை குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சக்கரை ஆலை அதிகாரிகள் கூறுகையில் பாய்லர் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் சரி செய்யப்படும், காத்திருக்கும் கரும்பு லோடுகள் விரைவாக அனுப்பப்படும் என்று மேலாளர் முனுசாமி தெரிவித்ததாக விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

சர்க்கரை ஆலை நிர்வாகம் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளை உரிய நேரத்தில் செய்திருந்தால் பல்லாயிரம் டன் கரும்புகள் தேங்கி இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் இனியாவது ஆலை நிர்வாகம் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 Dec 2022 3:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  3. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  4. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  5. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  6. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  7. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  10. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...