தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் அணைகள்

தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் அணைகள்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக செண்பகத்தோப்பு அணை நிரம்பியது.

கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்த காரணமாக படவேடு செண்பகத்தோப்பு அணையின் கொள்ளளவு தற்போது 54 அடியை எட்டியுள்ளது. இன்று காலை அணையில் இருந்து சுமார் ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கமண்டல நதியின் ஓரமாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்கும் படியும் வருவாய்த் துறை சார்பில் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான படவேடு கண்ணமங்கலம் இரும்பேடு உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

ஜவ்வாது மலை அடிவாரத்தில் அதிகபட்சமாக பத்து சென்டிமீட்டர் மழை நேற்று பதிவாகியுள்ளது. இதனால் அமிர்தி, காட்டாறு, காட்டுகாநல்லூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி கால்வாயில் மழை வெள்ளம் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. குன்னத்துர் கீழ்நகர் குண்டம் தடுப்பணையில் மழைநீர் நிரம்பியதால் ஆரணியில் உள்ள கமண்டலநாகநதி ஆற்றில் மழை வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளன. கோடை காலத்தில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!