சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி: சீரமைக்க மக்கள் கோரிக்கை
சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் உள்ள சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள சின்ன ஏழாச்சேரி கிராமம் அமைந்துள்ளது இங்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் தேவைக்காக மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 2004 ஆம் ஆண்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு பழுது ஏற்பட்டதால் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் நீர் தேக்க தொட்டி தற்போது முழுவதுமாக சேதம் அடைந்த நிலையில் இருந்து வருகிறது
கிராம மக்கள் அதிக அளவில் சென்று வரக்கூடிய குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியிலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு அருகிலும் அமைந்துள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.
மேலும் இந்த தொட்டியில் இருந்து தான் கிராமம் முழுவதும் குடிநீருக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. சேதமடைந்த நீர் தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக நீர் தேக்க தொட்டியை கட்ட வேண்டும் என கிராம மக்கள் ஊராட்சி ஒன்றியத்திலும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu