திருவண்ணாமலை: மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவியருக்கு கொரோனா

திருவண்ணாமலை: மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவியருக்கு கொரோனா
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும், மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் பேரில் பள்ளிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்று வந்த பரிசோதனை முடிவில், மேலராணி அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலக ஊழியர் ஒருவர், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 2 பேர், வாழ்விடந்தாங்கல் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், செங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் என, மொத்தம் ஆறு அசிரியர்களுக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், வழுதலங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 மாணவிகள், மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர், பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் என, நான்கு மாணவியர் உட்பட 11 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது, பெற்றோர், மாணவ- மாணவியர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!