/* */

டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர் திருட்டு

செய்யாறு அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மின்வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

HIGHLIGHTS

டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர் திருட்டு
X

டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர்  வயர்கள் திருடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா எச்சூர்போர்டு கிராமத்தில் இருந்து பாடித்தாங்கல் செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.

இந்த நிலையில் எச்சூரை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அவரது நிலத்தின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் பாகங்கள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் புரிசை மின் பகிர்மான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர்.

அப்போது மர்ம நபர்கள், டிரான்ஸ்பார்மருக்கு வரும் மின் இணைப்பை துண்டித்து, அதனை மின்கம்பத்தில் இருந்து கீழே இறங்கி உள்ளனர்.

பின்னர் டிரான்ஸ்பார்மரை உடைத்து அதற்குள் இருந்த காப்பர் வயர்களை திருடிச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் இருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் அனைக்காவூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 31 March 2022 2:53 AM GMT

Related News

Latest News

 1. கல்வி
  தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 45%...
 2. வீடியோ
  🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
 3. இந்தியா
  தண்டவாளங்கள் மூழ்கியதால் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து...
 4. வேலைவாய்ப்பு
  எச்ஏஎல் நிறுவனத்தில் ஆபரேட்டர் & டெக்னீசியன் காலிப்பணியிடங்கள்
 5. போளூர்
  போளூர் ரயில்வே மேம்பால பணிகள் எப்போதுதான் முடியும்? பொதுமக்கள் கேள்வி
 6. விளையாட்டு
  மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றி பெற்ற...
 7. வீடியோ
  😧கிடு கிடுவென உயரும் விலை | வெள்ளிக்கு விலை இவ்வளவா? #gold #silver...
 8. ஈரோடு
  மேட்டூர் அணையின் நீர்வரத்து 389 கன அடியாக சரிவு
 9. போளூர்
  கோடை மழை பெய்ததால் நெல்லை விதைப்பு செய்ய தொடங்கிய விவசாயிகள்
 10. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக அதிகரிப்பு