செய்யாறில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

செய்யாறில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

செய்யாறில் ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரசார்.

செய்யாறு தாலுகா அலுவலகம் அருகே மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தியை நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கில் அமலாக்கத் துறையினர் விசாரணை செய்வதை கண்டித்து செய்யாறு தாலுகா அலுவலகம் அருகில் ஆற்காடு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வழக்கறிஞர் கலையரசன், தில்லை, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ ராஜா பாபு, டாக்டர் வாசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் அமலாக்கத் துறையினர் செயலை கண்டித்தும் கோஷம் போட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!