இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவிடும் பணிகள் துவக்கம்
![இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவிடும் பணிகள் துவக்கம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவிடும் பணிகள் துவக்கம்](https://www.nativenews.in/h-upload/2024/06/07/1912658-dff38fb8-2def-481d-a230-23785b205602.webp)
இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் அளவிடும் பணியில் அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் அளவிடும் பணிகள் துவங்கப்பட்டது.
செய்யாறில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் டவுன் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உத்தரவுப்படி இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் கண்டறியும் பணி நடந்து வருகிறது. இந்து சமய அறநிலைக்கு துறைக்கு சொந்தமான செய்யாறு டவுன் அருள்மிகு கன்னியம்மன் திருக்கோயில் மொத்த சுமார் 25 சென்ட் உள்ளது.
மண்டல இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி ஆகியோரின் ஆலோசனையின் படி நேற்று கோயில் நிலத்தினை ஆய்வு செய்யும் பணியை தனி வட்டாட்சி யர் திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன், ஆய்வாளர் முத்து சாமி, செய்யார் நில அளவையாளர்கள் சிவக்குமார், சின்னராஜா, அருணாசலம் திருக்கோயில் நிர்வாகிகள், பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முதல் கட்டமாக 25 சென்ட் நிலத்தினை நவீன தொழில்நுட்ப கருவியின் மூலம் அளவீடு செய்தனர். இப்பணிகள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடைபெறும் என இந்து சமய அறநிலைத்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூபாய் 2 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் கோவில் இடம் கண்டெடுப்பு இந்து சமய அறநிலையத்துறை அதிரடி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அம்மையகரம் கிராம எல்லையில் அமைந்துள்ள விநாயகர், சுப்பிரமணியர், பிடாரியம்மன் ஆகிய கோவில்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலம் எங்கெங்கு உள்ளன என்பது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் தலைமையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, நில அளவீடு செய்யும் பணி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியின்போது, இதுவரை எந்தவித பயன்பாடும் இல்லாமல், கணக்கில் இருந்து காணாமல்போன, புதர்கள் மண்டிக் கிடந்த 5 ஏக்கர் நிலம், 100 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று அம்மையகரம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சிங்காரவேலு முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த சின்னசேலம் ஆய்வாளர் திருமூர்த்தி வழிகாட்டுதலின் பேரில், நில அளவையர்கள் சிவராசன், கபிலன் மற்றும் உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் நவீன நில அளவைகருவியைக் கொண்டு, கோயில் நிலங்களை கண்டறிந்து, அளவீடு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu