செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் துவக்கம்

செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் துவக்கம்
X

கொடியேற்றத்துடன் தொடங்கிய ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் ரத சப்தமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் ரத சப்தமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவோத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத சப்தமி பிரமோற்சவ விழாவானது, சனிக்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

முதல் விழாவில் பகல் கேடய உற்சவம், இரவு அபிஷேகம், கற்பக விருட்சம், காமதேனு, மயில், மூஷிக, ரிஷப வாகன புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாள் (பிப்.16) ரத சப்தமி தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறையினா் மற்றும் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

செய்யாற்றில் வரும் 16ம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஏற்பாடுகள் தீவிரம்

ரதசப்தமியை முன்னிட்டு கலசபாக்கம் செய்யாற்றில் வரும் 16ம் தேதி அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைெபற்று வருகிறது. கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி முன்னிட்டு வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையொட்டி திருவண்ணாமலை கோயிலில் இருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் புறப்பட்டு கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். கலசபாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு கிராமம் அருகே செல்லும்போது கிராமத்தின் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிப்பர்.

இதனை தொடர்ந்து கலசபாக்கம் செய்யாற்றில் செல்லும் போது கலசபாக்கத்தில் இருந்து திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் செய்யாற்றில் நேருக்கு நேர் சங்கமிப்பர். இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நடைபெறும்.

தொடர்ந்து, செய்யாற்றில் மெகா பந்தல் அமைக்கப்பட்டு உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருமா முடீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

முன்னதாக, துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை பார்வையிட்டு கோயிலுக்கு திரும்புவார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில், தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil