கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்காத ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை

கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்காத ஊராட்சி தலைவர் மீது   நடவடிக்கை
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்காத மேல்மா ஊராட்சி தலைவர் திருவண்ணாமலை கலெக்டர் நடவடிக்கை

ஊராட்சி கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்காத ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்தும், ஊராட்சி தலைவரின் காசோலை அதிகாரத்தை பறித்தும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா ஊராட்சி தலைவராக சோபனா என்பவரும் ஊராட்சி செயலாளர் புஷ்பலதா என்பவரும் இருந்தனர். இந்த ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் பிரதாப் கடந்த சில நாட்களுக்கு முன் களஆய்வு செய்தபோது, ஊராட்சி கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்காததாலும், ஆய்வின்போது, ஊராட்சி தலைவர் ஊரில் இல்லாததாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட ஆட்சியர் முருகேஷூக்கு பரிந்துரைத்தார்.

இதையேற்று, ஊராட்சி தலைவரின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டு, அந்த அதிகாரத்தை அனக்காவூர் கிழக்கு யூனியன் பி.டி.ஓ.,வுக்கு வழங்கியும், ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்தும், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்