செய்யாறு மோட்டார் வாகன அலுவலகத்திற்கு புதிய கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்

செய்யாறு மோட்டார் வாகன அலுவலகத்திற்கு புதிய கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்
X

செய்யாறு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் 

செய்யாறு மோட்டார் வாகன அலுவலக புதிய கட்டடtத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (16.12.2021) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள செய்யாறு, மோட்டார் வாகன அலுவலகத்திற்கு 1 கோடியே 97 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள செய்யாறு, மோட்டார் வாகன அலுவலகத்திற்கு 1 கோடியே 97 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் , பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, போக்குவரத்துத்துறை அமைச்சர் .ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!