செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மின்னணு நூலகக் கட்டடம் திறப்பு
மின்னணு நூலக கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த செய்யாறு எம் எல் ஏ ஜோதி மற்றும் அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோந்த 8,216 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக, 2022 - 23ஆம் கல்வியாண்டில் ருசா திட்டத்தின் கீழ் நூலகா் அறை, படிப்பகம், பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் 376.30 சதுர மீட்டா் பரப்பளவில் நூலகக் கட்டடம் கட்டப்பட்டது.
ரூ. ஒரு கோடியில் கட்டப்பட்ட மின்னணு நூலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வா் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.
இதை தமிழக முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, நூலகத்தில் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் முன்னிலையில், செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி குத்துவிளக்கு ஏற்றி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் ராஜி (வெம்பாக்கம்), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்), திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் மோகனவேல், கீழ்ப்புதுப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் சுகன்யா பாரி, கவுன்சிலா்கள் ஞானவேல், காா்த்திகேயன், ரமேஷ், ஒப்பந்ததாரா் கோபால், உதவிச் செயற் பொறியாளா் வேலன், ஒன்றியச் செயலா்கள் சங்கா், தினகரன், திமுக நிா்வாகிகள் ரவி, பாபு, சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu