செய்யாறு, அனக்காவூர் ஒன்றியங்களில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம்

செய்யாறு, அனக்காவூர் ஒன்றியங்களில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு  பேரணியை ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நம்ம ஊரு சூப்பர் இயக்கம் சார்பில் செய்யாறு, அனக்காவூர் ஒன்றியங்களில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, அனக்காவூர் ஒன்றியங்களில் நம்ம ஊரு சூப்பர் இயக்கம் சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாமை ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

செய்யாறு ஒன்றியம், வேளியநல்லூர் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பர் தூய்மை பணிக்கான விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சேர்மன் நாவல்பாக்கம் பாபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பத்மப்ரியா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஜோதி எம்.எல்..ஏ கலந்துகொண்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து கிராமம் முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழித்து சுகாதாரத்தை மேம்படுத்த வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பின்னர் அனக்காவூர் ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சைக்கிளில் ஊர்வலமாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், முன்னாள் எம்.எல்.ஏ. கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story