செய்யாற்றில் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சாலையோர வியாபாரிகள் , கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்
செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநிலக் குழு நிா்வாகி சங்கா் தலைமை வகித்தாா். குழு உறுப்பினா் அம்பிகா, முரளி, சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். நகர விற்பனைக் குழுவில் இரண்டு பங்கு இடங்களை சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவசமாக தள்ளுவண்டிகளை வழங்க வேண்டும். தோதல் வாக்குறுதிப்படி வட்டியில்லா கடனாக ரூ.15 ஆயிரம் வீதம் கூட்டுறவு வங்கி மூலம் உண்மையான தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
நிறைவில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவா் பிரபு நன்றி கூறினாா். ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சர்தார் தலைமை தாங்கினார்.
மாவட்ட நிர்வாக குழு முத்தையின், தங்கராஜ் முன்னிலை வகித்தார். செங்கம் வட்டத்தில் குப்பநத்தம் அருகே உள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் 60 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளதை அளவீடு செய்து தமிழ்நாடு அரசு வருவாய் துறை கணக்கில் முழுவதுமாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏழுமலை, குப்புசாமி, மகாவிஷ்ணு, முருகன், பாலமுருகன், கோபி ஆகியோர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தங்கமணி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu