பழுதான ட்ரான்ஸ்பார்மர் மாற்றி தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பழுதான ட்ரான்ஸ்பார்மரை மாற்றி தர கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருவண்ணாமலை அடுத்த கொளக்காராவாடி ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பாக ட்ரான்ஸ்பர் வெடித்து பழுதாகியுள்ளது. இதுகுறித்து பாமக மாவட்ட தலைவரும் ஒன்றியக்குழு உறுப்பினருமான ஏழுமலை தலைமையில் கிராம மக்கள் பலமுறை மல்லவாடி துணை மின் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மி ன்வா ரி ய உ த வி பொறியாளர் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை பார்த்துவிட்டு சென்றதோடு சரி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .
இந்நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருவண்ணாமலை தலைமை மின்சார துறை பொறியாளர் மற்றும் பகிரமான அலுவலக முன்பு ஒன்றியக்குழு உறுப்பினருமான ஏழுமலை தலைமையில் கிராம மக்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் மற் றும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உடனடியாக ட்ரான்ஸ்பர் பழுது பார்க்கப்பட்டடு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனா ல் திருவண்ணாமலை வேலூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கழிவுநீர் அடைப்பு நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
செய்யாற்று காமராஜர் நகர் பகுதியில் கழிவு நீர் மழை நீர் வெளியேற வழி இன்றி தவிப்பதாக செய்யாறு மார்க்கெட் பகுதி பொதுமக்கள் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரப் பகுதியில் மார்க்கெட் உள்ள பகுதி காமராஜர் நகராகும் இங்கு சுமார் ரூபாய் 4.5 கோடி மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டி மூன்று மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
இந்த கட்டிடம் முறையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் அப்பகுதியை ஒட்டிய பகுதியில் கழிவு நீர் வெளியேற முறையான வசதி செய்து தரவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கூறினர். இதனால் காமராஜர் நகர் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே குளம் போல கழிவு நீரும் மழை நீரும் தேங்கி சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் இதனை சீரமைக்க பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி பொதுமக்கள் முறையீட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் அப்பகுதியில் கழிவு நீர் மற்றும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த செய்யாறு போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu