செய்யாறில் நாளை புதிய மின் இணைப்பு வழங்கும் முகாம்

செய்யாறில் நாளை புதிய மின் இணைப்பு வழங்கும் முகாம்
X
செய்யாறில் நாளை புதன்கிழமை புதிய மின் இணைப்பு வழங்குவது குறித்த முகாம் நடைபெறுகிறது.

செய்யாறில் நாளை புதன்கிழமை புதிய மின் இணைப்பு வழங்குவது குறித்த முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து செய்யாறு செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது புதிய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுக்கு புதிய மின் இணைப்பு வேண்டி 31.8.2018 வரை விண்ணப்பம் அளித்துள்ளனர்.

இவர்கள் நாளை காலை 9 மணிக்கு செய்யாற்றில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு தேவையான ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட உரிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு, பெயர் மற்றும் எண்கள் மாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!