கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன் தம்பி கைது

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன் தம்பி கைது
X
கீழ்பென்னாத்தூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன் தம்பி கைது:

கீழ்பென்னாத்தூர் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 51), மண்பாண்ட தொழிலாளி. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் சாந்தி. இந்நிலையில் வேலுச்சாமி தனது வீட்டின் முன்புறம் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாந்தி அவரிடம் சென்று என்னை கண்காணிப்பதற்காக கேமரா பொருத்துகிறாயா என கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் வேலுச்சாமி சாந்தியை மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சாந்தியின் மகன்கள் வேடியப்பன், சந்தோஷ் ஆகிய இருவரும் ஓடிச் சென்று வேலுச்சாமியிடம் இருந்த மண்வெட்டியை பறித்து அவரை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் தடுக்க வந்த வேலுச்சாமி மனைவி சுசிலா, தாய் நல்லம்மா ஆகிய 2 பேரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவான அண்ணன்-தம்பி இருவரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரணி அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போளூர் அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய சாராய வேட்டையில் களம்பூர் முருகர் கோயில் குன்று மேற்கு பகுதியில் சுமார் 5495 லிட்டர் சாராயம் மற்றும் நாட்டு சாராயமும் கைப்பற்றினர்.

அப்போது போலீசாரை பார்த்து தப்பும் முயன்ற சாராய வியாபாரிகளான முனியப்பன் குமார் சின்னராசு விஜயகுமார் ஆகிய நான்கு பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை:

வெம்பாக்கம் தாலுகா, தூசி அருகே உள்ள மாத்தூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 37), விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தாலும், நீரிழிவு நோயாலும் நாகப்பன் மனவேதனையில் இருந்தார். இதனால் இன்று காலை ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
ai in future agriculture