காலை சிற்றுண்டி திட்டம்: நகராட்சி கண்காணிப்பு அலுவலா்கள் ஆய்வு

காலை சிற்றுண்டி திட்டம்: நகராட்சி கண்காணிப்பு அலுவலா்கள் ஆய்வு
X

காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்

செய்யாறு நகராட்சிப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முதலமைச் சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தனா்

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதி பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை, செயலாக்கத் துறை கண்காணிப்பு அலுவலா்கள் திடீரென ஆய்வு செய்தனா்.

திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் ஏழு ஆரம்ப பள்ளிகள், மூன்று நடுநிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள 771 மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி தயாரிக்கும் மையம் மற்றும் மாணவா்கள் உணவு அருந்தும் மையங்களான நகராட்சி பள்ளிகளில் காலை தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் தலைமையில் கலைச்செல்வி, தேவி ஆகியோா் அடங்கிய குழுவினா் திடீரென நேரில் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின்போது, பள்ளிகளில் உணவு அருந்தும் மாணவா்கள், அவா்களின் பெற்றோா் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் ஆகியோரிடம் இந்தத் திட்டம் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தனா்.

பள்ளிப் பிள்ளைகளுடன் அமா்ந்து காலை உணவை வழங்கிய விவரம் மற்றும் உணவின் தரத்தை ஆய்வு செய்தனா்.

அப்போது, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (பள்ளி சத்துணவுப் பிரிவு) கோபாலகிருஷ்ணன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் மோகனவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் விஸ்வநாதன், செந்தில், ஆகியோா் உடனிருந்தனா்.

வெம்பாக்கம் ஒன்றியத்தில் சமையல் கூடம், நியாயவிலைக்கடை கட்டடங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.46.88 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடம், நியாயவிலைக் கடை கட்டடம் ஆகியவற்றை செய்யாறு ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம் வடமாவந்தல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 7.43 லட்சத்தில் கட்டப்பட்ட சமையலறைக் கூட கட்டடம், அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டடப்பட்ட கூட்டுறவு நியாயவிலை கடை, அப்துல்லாபுரத்தில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.27.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்றக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா வடமாவந்தல், அப்துல்லாபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலை இயக்குநரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தரணிவேந்தன் தலைமை தாங்கினாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் முன்னிலை வகித்தாா்.

வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் ராஜு வரவேற்றாா்.இதில், ஜோதி எம்எல்ஏ புதிய கட்டடங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் திலகவதி ராஜ்குமாா், திருவத்திபுரம் நகா் மன்றத் தலைவா் மோகனவேல், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், மாவட்ட துணைச் செயலாளா்கள், கா.லோகநாதன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ,பொதுக்குழு உறுப்பினா் பாபு, ஒன்றியச் செயலாளா்கள் சீனிவாசன், சங்கா், தினகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!