சிறுபாலம், மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு திறப்பு

Borewell Motor | Electric Motor
X

சிறுபாலம், மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றை ஜோதி  எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

Borewell Motor -செய்யாறு அருகே சிறுபாலம், மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

Borewell Motor -திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுபாலம், மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றை ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தாா். வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தில் மாநில நிதிக் குழு மானியம், மாவட்ட ஊராட்சிக் குழு நிதியிலிருந்து ரூ.3.20 லட்சத்தில் தோப்புக்குளம் அருகில் புதிய ஆழ்துளைக் கிணறு, மின் மோட்டாா் அமைக்கப்பட்டது.

இதேபோல, அந்தக் கிராமத்திலுள்ள மயானப் பாதைக்கு செல்லும் வழியில் ரூ.29.82 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்டது. இவற்றை கிராம மக்களின் பயன்பாட்டுக்காக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி, வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் ராஜு ஆகியோா் முன்னிலையில், செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல், வெங்கட்ராமன், வெம்பாக்கம் ஒன்றியச் செயலா்கள் சீனுவாசன், சங்கா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்