/* */

ஏரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிணமாக மீட்பு

மாமண்டூர் ஏரி உபரி நீரில் அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி 2 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

ஏரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிணமாக மீட்பு
X

ஏரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரழந்த மாற்றுத்திறனாளி முத்து

காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்தவர் முத்து (வயது 55), பட்டு தொழிலாளியான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கடந்த 30-ந் தேதி மாலை தூசி மாமண்டூர் ஏரி பார்ப்பதற்காக குடும்பத்தோடு வந்திருந்தபோது நீரில் குளிக்க ஆசைப்பட்டு, குடும்பத்தோடு அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். முத்து குளித்துக் கொண்டிருந்த போது கால் தவறி விழுந்ததில் ஏரி வெள்ள உபரி நீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து முத்துவை தீவிரமாக தேடினர். மாலை நேரமானதால் இருட்டு பகுதியில் தேட முடியாத சூழ்நிலையில் நேற்று மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடியும் முத்துவின் உடல் கிடைக்கவில்லை. அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 13 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் செய்யாறு தீயணைப்பு துறையினர் 11 பேரும் சேர்ந்து தேடும் பணி தொடங்கியது. இன்று அதிகாலை இரட்டை பாலம் அருகே பிணமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 3 Dec 2021 6:50 AM GMT

Related News