மாமண்டூர் ஏரியின் மதகு அருகே ஆண் பிணம்

மாமண்டூர் ஏரியின் மதகு அருகே ஆண் பிணம்
X

மாமண்டூர் ஏரியின் மதகு அருகே ஆண் பிணம் 

மாமண்டூர் ஏரியின் மதகு அருகே ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே மாமண்டூர் ஏரியின் மதகு அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்து கொண்டிருந்தது. ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதனைப் பார்த்து கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் அளித்தனர்

அதன்பேரில் தூசி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். தூசி காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் போலீசாருடன் சென்று இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் யார் எதற்காக இந்த பகுதிக்கு வந்தார் கால் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொடிவேரியில் பரிசல் சவாரிக்கு லைப் ஜாக்கெட் இனி கட்டாயம்..!