மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
X

தி.மு.க. அரசை கண்டித்து தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு சொத்து வரி மற்றும் மின் கட்டணங்களை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில தலைவர் பெப்சி சிவா கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், பாஜக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் கிஷோர் குமார், பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்டத் தலைவர் விஜயராஜ் ,ஓ.பி.சி. அணி மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதிஷ்குமார், ரமேஷ், முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் அருணை ஆனந்தன், இறைமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகிகள் வெங்கடேசன், தனசேகரன், முத்துசாமி, சரவணன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர தலைவர் லட்சுமணன் வரவேற்றார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு மின்சார உயர்வு உட்பட தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பெருமாள், முனுசாமி, சரவணன், நரசிம்மசாமி, வரதராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.

முன்னதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே மேடை அமைத்து பேசிக்கொண்டிருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் திடீரென ஊர்வலமாக செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சென்றனர். பா.ஜ.க. நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளே சென்றுவிட கூடாது என்கிற வகையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அலுவலகத்தை பூட்டினர். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் அலுவலகம் முன்பாக நின்று கண்டன போராட்டத்தினை நடத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!