திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிய செய்யாறு எம்.எல்.ஏ. ஜோதி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நகர தி.மு.க. இளைஞரணி சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அறிஞா் அண்ணா சிலை அருகே திங்கட்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஜோதி எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நகா்மன்றத் தலைவா் மோகனவேல், நகா்மன்ற உறுப்பினா் விஸ்வநாதன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஞானவேல், சீனுவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசியில் தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நகர செயலாளர் தயாளன் தலைமையில் கொண்டாடப்பட்டது .
இதில் கலந்துகொண்ட வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தரணி வேந்தன், வந்தவாசி எம்.எல்.ஏ. அம்பேத்குமார், செய்யாறு எம்.எல்.ஏ. ஜோதி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் .
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் , நேரடி ஆகிய இடங்களில் பட்டாசுகள் வெடித்து இளைஞர் அணியினர் உதயநிதி ஸ்டாலின் குறித்த வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஜான், நகர மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன், மற்றும் திமுக மாவட்ட அணி தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் ,தொண்டர் அணி இளைஞரணி அமைப்பாளர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் , நகர மன்ற தலைவர் மணி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி, ஒன்றிய செயலாளர் அன்பழகன் ,சுந்தர் ,மாவட்ட பிரதிநிதிகள் ரவி, பாலமுருகன் திமுக நிர்வாகிகள் ,கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu