சபாஷ் சரியான போட்டி: ஆரணியா? செய்யாறா?

சபாஷ் சரியான போட்டி: ஆரணியா? செய்யாறா?
X

செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கக்கோரி பைக் பேரணி 

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கக் கோரி பைக் பேரணி

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று ஆரணியில் அனைத்து சங்கங்களின் சார்பாக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்த செய்தியை நேற்று வெளியிட்டு இருந்தோம்.

இது தொடர்ச்சியாக இன்று செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கக்கோரி பைக் பேரணி தமிழக முதல்வரை சந்திப்பதற்கு எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு அளித்தனர்

செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கக்கோரி பைக்கில் பேரணி சென்று தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதியிடம், செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் .

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வந்தவாசியில் நடந்த கூட்டத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நினைவூட்டும் விதமாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்து கொடுக்க சட்டமன்ற உறுப்பினர் ஜோதியிடம் கோரிக்கை மனு அளிக்க செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பைக் பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி செய்யாறு திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் தொடங்கிய பைக் பேரணி மார்க்கெட், காந்தி சாலை, ஆற்காடு சாலை வழியாகச் சென்று எம்எல்ஏ அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து, முதல்வரை சந்திப்பதற்கான மனு அளித்தனர்.

நிகழ்ச்சியில் செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் அ.பரணிராஜன், வி.ரவி, எம்.புகழேந்தி, ஒருங்கிணைப்பாளர் ப.நடராஜன், அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஜெயிக்கப்போவது ஆரணியா , செய்யாறா பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Next Story