செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் வணிக வளாகம் கட்ட பூமி பூஜை

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் வணிக வளாகம் கட்ட பூமி பூஜை
X

திருவத்திபுரம் சந்தைமேடு பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்க்காக பூமி பூஜை நடைபெற்ற காட்சி.

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சியில் ரூபாய் 4 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவத்திபுரம் நகராட்சியில் சந்தைமேடு பகுதியில் ரூபாய் 4.44 கோடி செலவில் 132 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் , நகராட்சி ஆணையாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் ஆகியோர் பங்கேற்று பூமி பூஜை செய்து கட்டட பணிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் ,பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!