செய்யாற்றில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா

செய்யாற்றில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா
X
செய்யாற்றில் செயல்பட்டு வரும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும்‌ 3 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம்‌,செய்யாறு காந்தி சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி கிளையில்‌ பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் 3 பேர்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தூய்மை பணியாளர்களை கொண்டு வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மறுதேதி குறிப்பிடாமல் வங்கிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட வங்கி ஊழியர்கள் வசிக்கும் வீதிகள், அன்று அவர்களுடன் தொடர்பில் இருந்த வாடிக்கையாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கியை நாடி வரும் வாடிக்கையாளர்கள், ஊரக வேலை திட்ட பணியாளர்கள், மகளிர் குழுவினர், சிப்காட் நிறுவன ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என பலதரப்பினர் வங்கி சேவை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!