வனவிலங்கு பாதுகாப்பு: கிராம மக்களிடம் வனத்துறை சரகஅலுவலர் அறிவுறுத்தல்

வனவிலங்கு பாதுகாப்பு: கிராம மக்களிடம் வனத்துறை சரகஅலுவலர் அறிவுறுத்தல்
X

வெங்காய வேலூர் கிராமத்தில்  வனவிலங்கு பாதுகாப்பு குறித்து  கிராம மக்களிடம் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டம் 

திருவண்ணாமலை அருகே வனவிலங்குகள் பாதுகாப்புக்கு கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலையை அடுத்த வெங்காய வேலூர் கிராமத்தில் வனபாதுகாப்புக்கு அதே பகுதியை சேர்ந்த காதர் பாஷா என்பவர் வனத்துறை சரகஅலுவலர் சீனிவாசன் தலைமையில், புதியதாக தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.இந்தநிகழ்ச்சியில் ரகமத்துல்லா, முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், ஒன்றிய துணை செயலாளர் கருணாநிதி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். வனப்பகுதியில் உள்ள விலங்குகளை வேட்டையாடுவதும், அப்பகுதியில் தேவையில்லாமல் சுற்றுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று கிராம மக்களுக்கு வனச்சரக அலுவலர் சீனிவாசன் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
புதுவலவு காலனியில் களைகட்டிய சமுதாயக்கூட திறப்பு விழா..!